ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, July 29, 2006

நலம் வாழ என்னாளும்

மனிதர்கள் சிலனேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

தக தய்ய தய்ய தய்யா

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா

என் மனதில் உந்தன் ஆதிக்கமா

இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா

இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா


உன்னால் என்மனம் அடைந்தது பாதி

உன்னால் என்மனம் இழந்தது பாதி

காதல் ஜோதியே வாழ்வின் மீதியே

தேவதை நீ மெய்யோ பொய்யோ

சின்னச்சின்ன மழைத்துளிகள்

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இதுஅட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

திறக்காத காட்டுக்குள்ளே

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சிஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு

ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியேகாட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்நெஞ்சில்

ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

.
.
.
.
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது - புதியகண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி
.
.
.
புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு

சத்தம் இல்லாத தனிமை

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன் தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன் குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

இரவு பகலைத் தேட
.
.

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்

பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்

மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்

பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்

நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ

அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்

அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...

Sunday, July 23, 2006

அன்பே சிவம்

இதயம் என்பது சதைதான் என்றால் எரித்தால் திண்றுவிடும்,
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்



அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா...
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா...

பூங்காற்றிலே...

காற்றின் அழைவரிசை கேட்கின்றதா?

கேட்கும் பாட்டில் ஒரு உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா?

நெஞ்சு நனைகின்றதா? இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?

காற்றில் கண்ணீரையேற்றி கவிதை செந்தேனையூற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

வானம் எங்கும் உன் பிம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்

வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரொடு கிள்ளி

என்னை செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னெ

ஓடொடிவா...

ஆடாத ஆட்டமெல்லாம்...

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்து கொண்டே போகின்றேம்

மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்

காலம் மீண்டும் திறும்பாதே..
பாதை மாறிப் போகதே
பூமி கொஞ்சம் குழுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே...

மூங்கிள் காடுகளே...

மூங்கிள் காடுகளே...

மூங்கில் காடுகளே! வண்டு முனகும் பாடல்களே!
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே!
ஹோ! ஹோ! ஹோ! ஹோ!
(மூங்கில்)
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்துப் போனேன் மனிதனாய் இருந்து...
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து...
திரிந்து, பறந்து, பறந்து.....!
(மூங்கில்)
சேற்றுத் தண்ணீரில், மலரும் சிவப்புத் தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே!
வேரை அறுத்தாலும், மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை!
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும்!
தாமரைப் பூவாய் மாறேனோ?
ஜென்ம சாபல்யங்கள் காண்பேனோ?
மரமாய் நானும் மாறேனோ?
என் மனிதப் பிறவியில் உய்யேனோ?
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?
(மூங்கில்)
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது!
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டித் தன்னை நீட்டித்துக் கொள்கிறதே!
மேகமாய் நானும் மாறேனோ?
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ?
சூரியன் போலவே மாறேனோ?
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ?
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ?
(மூங்கில்)