ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Sunday, July 23, 2006

மூங்கிள் காடுகளே...

மூங்கிள் காடுகளே...

மூங்கில் காடுகளே! வண்டு முனகும் பாடல்களே!
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே!
ஹோ! ஹோ! ஹோ! ஹோ!
(மூங்கில்)
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்துப் போனேன் மனிதனாய் இருந்து...
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து...
திரிந்து, பறந்து, பறந்து.....!
(மூங்கில்)
சேற்றுத் தண்ணீரில், மலரும் சிவப்புத் தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே!
வேரை அறுத்தாலும், மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை!
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும்!
தாமரைப் பூவாய் மாறேனோ?
ஜென்ம சாபல்யங்கள் காண்பேனோ?
மரமாய் நானும் மாறேனோ?
என் மனிதப் பிறவியில் உய்யேனோ?
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?
(மூங்கில்)
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது!
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டித் தன்னை நீட்டித்துக் கொள்கிறதே!
மேகமாய் நானும் மாறேனோ?
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ?
சூரியன் போலவே மாறேனோ?
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ?
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ?
(மூங்கில்)

0 Comments:

Post a Comment

<< Home