ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Thursday, September 21, 2006

சாதி மல்லிப் பூச்சரமே

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கடும்
உன்னைப் போல் எல்லோரும் என என்னலும்
அதில் இன்பத்தை தேடவும்


(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

1 Comments:

  • எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
    இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
    தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
    தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
    கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
    கடலைப் போல் விரிந்ததாய் இருக்கடும்
    உன்னைப் போல் எல்லோரும் என என்னலும்
    அதில் இன்பத்தை தேடவும்

    ennai kavarnthavarikal..
    rahini

    By Blogger rahini, at Thursday, October 05, 2006 8:34:00 AM  

Post a Comment

<< Home