மழை கால ரசனைகள்...
- சின்ன சின்ன மழைத் துளிகள்... (download)
சின்னச்சின்ன மழைத்துளிகள்
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இதுஅட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் - தீம் தனன தீம் தனன... (download)
- தென்மேற்கு பருவ காற்று... (download)
- மூங்கில் காடுகளே... (download)
மூங்கிள் காடுகளே...
மூங்கில் காடுகளே! வண்டு முனகும் பாடல்களே!
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே!
ஹோ! ஹோ! ஹோ! ஹோ!
(மூங்கில்)
இயற்கைத் தாயின் மடியைப் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்துப் போனேன் மனிதனாய் இருந்து...
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து...
திரிந்து, பறந்து, பறந்து.....!
(மூங்கில்)
சேற்றுத் தண்ணீரில், மலரும் சிவப்புத் தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறதே!
வேரை அறுத்தாலும், மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை!
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும்!
தாமரைப் பூவாய் மாறேனோ?
ஜென்ம சாபல்யங்கள் காண்பேனோ?
மரமாய் நானும் மாறேனோ?
என் மனிதப் பிறவியில் உய்யேனோ?
வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளைப் பனித்துளி ஆவேனோ?
(மூங்கில்)
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது!
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்துப் போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டித் தன்னை நீட்டித்துக் கொள்கிறதே!
மேகமாய் நானும் மாறேனோ?
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ?
சூரியன் போலவே மாறேனோ?
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ?
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ?
(மூங்கில்) - திறக்காத காட்டுக்குள்ளே... (download)
திறக்காத காட்டுக்குள்ளே
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சிஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியேகாட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு
அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்நெஞ்சில்
ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
.
.
.
.
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது - புதியகண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி
.
.
.
புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு - புல்வெளிபுல்வெளி தன்னில்... (lyrics) (download)
புல்வெளி புல்வெளி தன்னில்
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா.. இல்லை பூவில் உறங்கவா...
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள் - சின்ன சின்ன ஆசை... (lyrics) (download)
- புது வெள்ளை மழை... (lyrics) (download)
- பச்சை கிளிகள் தோளோடு...(download)
பச்சைக் கிளிகள் தோளோடு
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் - கொஞ்சும் மைனாகளே... (download)
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்
நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும்
பகலில் ஒரு வெண்ணிலா...பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா
விடை சொல் சொல் சொல்
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதோ
கனவே கை சேர வா
என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்
பரதம் தம் தம் மனதுக்குள் டாம் டூம் டிம்
பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு - புத்தம் புது பூமி வேண்டும்... (download)
- மார்கழி பூவே... (download)
- பழமுதிர்ச்சோலை... (download)
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட - தாலாட்டும் காற்றே வா... (download)
- பூங்காற்று புதிரானது... (download)
பூங்காற்று புதிரானது
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்போலே விளையாடும்
நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானல் நீ எந்தன் உயிரன்றோ - பூங்காற்று உன்பேர் சொல்ல... (download)
- தென்றல் வந்து தீண்டும் போது... (lyrics) (download)
- மஞ்சள் வெயில் மாலையிலே... (lyrics) (download)
posted by Suresh at
2:11 AM
0 Comments:
Post a Comment
<< Home