பச்சைக் கிளிகள் தோளோடு
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

2 Comments:
nanriyudan valthukkal thodarattum ungkal eluthin aalam
panivanpudan
rahini
By
rahini, at Monday, August 21, 2006 11:19:00 AM
thangal vazhthukal-luku migavum nandri...
By
Suresh, at Saturday, August 26, 2006 8:56:00 PM
Post a Comment
<< Home