ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, August 05, 2006

மோகம் என்னும் தீயில் என் மனம்

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே நீயும் இங்கே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணி வேர் வரையில் ஆடி விட்டதடி
காப்பாய் தேவி
காப்பாய் தேவி

0 Comments:

Post a Comment

<< Home